ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், மஞ்சுளா, அசோகன், பத்மினி, மேஜர் சுந்தர்ராஜன், மனோகர், சோ, எஸ்.வி.ராம்தாஸ், ஜோதிலட்சுமி நடித்த படம் ரிக்ஷாக்காரன். 1971ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தை எம்.கிருஷ்ணன் நாயர் இயக்கி இருந்தார். சத்யா மூவீஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்திருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார், வி.ராமமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருந்தார். சிறந்த நடிகருக்கான தேசிய விருதை எம்.ஜி.ஆருக்கு பெற்றுத் தந்த படம். ரிக்ஷாக்காரர்கள் என்றால் குறைவாக மதிப்பிடப்பட்ட காலத்தில் அவர்களுக்கு மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்த படம்.
45 ஆண்டுகளுக்கு பிறகு ரிக்ஷாக்காரனை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மெருகேற்றி வெளியிட இருக்கிறார்கள். டிஜிட்டல் பிரிண்ட், டால்பி ஒலித்தரம், சினிமாஸ்கோப் என பல புதுமைகளுடன் படம் வெளிவர இருக்கிறிது. எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி இதனைச் செய்கிறார்கள். குவாலிட்டி சினிமா சார்பில் பி.மணி, டி.கே.கிருஷ்ணன், மற்றும் பிலிம் விஷன் சார்பில் கே.ராமு ஆகியோர் இணைந்து வெளியிடுகிறார்கள்.