ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் 1984ம் ஆண்டு வெளிவந்த படம் நான் மகான் அல்ல. ரஜினியுடன் ராதா, நம்பியார், வி.கே.ராமசாமி, சோ, சத்யராஜ் உள்பட பலர் நடித்திருந்தார்கள். இளையராஜா இசை அமைத்திருந்தார், பாபு ஒளிப்பதிவு செய்திருந்தார். கே.பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்தது, எஸ்.பி.முத்துராமன் இயக்கி இருந்தார்.
தவறு செய்யும் சமூக விரோதிகளை ரஜினி காந்தி வழியில் புத்திமதி சொல்லித் திருத்த முயற்சிப்பார். ஆனால் அவரால் முடியாது, அதனால் ஆயுதத்தை கையில் எடுத்து எதிரிகளை அழிப்பார். இந்தப் படத்திற்கு நான் காந்தி அல்ல என்று பெயர் வைத்தார் எஸ்.பி.முத்துராமன்.
அகிம்சை வழி தோற்பதாகவும், ஆயுதம் வெல்வதாகவும் காட்டும் இந்தப் படத்திற்கு காந்தியின் பெயர் வைக்ககூடாது. அதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று ஒருவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். எஸ்.பி.முத்துராமன் வழக்கை சந்தித்தார். அவர் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தார். ஆனால் தீர்ப்பு படத்துக்கு எதிராக வந்தது. நான் காந்தி அல்ல டைட்டிலை மாற்றும்படி உத்தவிட்டது. அதன் பிறகு நான் மகான் அல்ல என்று மாற்றப்பட்டது. மகான் என்பது பொதுவான சொல்லாக இருந்தாலும் காந்தியை எல்லோரும் காந்திமகான் என்று சொல்வதால் இந்த டைட்டில் வைக்கப்பட்டது. படமும் வெளிவந்து வெற்றி பெற்றது.