பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? |
அஜய் தேவ்கனின் கனவுப்படமான சிவாய் படம் பிரமாண்டமாய் உருவாகி வருகிறது. அஜய் தேவ்கன் ஹீரோவாக நடிப்பதுடன், இயக்கியும், தயாரித்தும் வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை வருகிற ஆகஸ்ட் மோ் தேதி ரிலீஸ் செய்ய உள்ளார் அஜய். பொதுவாக பாலிவுட் சினிமா தொடர்பான விழாக்கள் எல்லாம் மும்பையில் அல்லது டில்லியில் நடக்கும். ஆனால் அஜய், தன் சிவாய் பட டிரைலரை இந்தூரில் நடத்த உள்ளார்.
இதுகுறித்து அஜய் தேவ்கன் கூறியதாவது... ‛‛நான் எனது ரசிகர்களை சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன், அதற்காகவே சிவாய் டிரைலரை இந்தூரில் வெளியிடுகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் இந்த விழாவில் இப்பட ஹீரோயின் சாயிஷா சைகல், மாஜி ஹீரோயின் சாயிரா பானு உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
‛சிவாய்' படத்தின் டிரைலரை அக்ஷ்ய் குமாரின் ருஷ்டம் படத்துடனும் ரிலீஸ் செய்ய இருக்கிறார் அஜய்.