ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழில் அருள்நிதி நடிப்பில் வெளியான ‛மெளன குரு' படத்தை ஹிந்தியில் ‛அகிரா' என்ற பெயரில் ரீ-மேக் செய்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அருள்நிதி கதாபாத்திரத்தை அப்படியே சோனாக்ஷி சின்ஹாவிற்காக மாற்றியிருக்கிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் நடந்து வருகிறது. ஏற்கனவே, இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடத்தில் அமோக ஆதரவை பெற்றிருக்கிறது. குறிப்பாக டிரைலரில் சோனாக்ஷியின் நடிப்பை பார்த்து சக நடிகைகளே மிரண்டு போய் இருக்கிறார்கள்.
இந்நிலையில், இப்படத்தில் சோனாக்ஷி ஒரு பாட்டு பாட இருக்கிறார். படத்திற்கான புரொமோஷனல் பாடலான இப்பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது. அகிரா படத்தை பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்திருக்கிறது, இப்படம் செப்., 2-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.