'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாள சினிமாவில் இருந்து கோடம்பாக்கத்தை நோக்கி படயெடுத்து வந்து கொண்டிருக்கும் நடிகைகளில் அருந்ததி நாயரும் ஒருவர். இவர் தற்போது விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள சைத்தான் படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் அவர் கமிட்டானபோதே வேறு சில படவாய்ப்புகளும் அவரைத் தேடிச்சென்றன. ஆனால், விஜய் ஆண்டனி படம் வெளியானபிறகு புதிய படங்களில் கமிட்டானால் பெரிய ஹீரோக்களின் படவாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் அந்த வாய்ப்புகளை தள்ளி வைத்தார் அருந்ததி நாயர்.
மேலும், சைத்தான் படத்துக்காக கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் வரை அவர் பொறுமையாக காத்திருந்து நடித்துள்ளார். தற்போது படமும் ரிலீசுக்கு தயாராகி விட்டது. இந்த படத்தில் வழக்கமான நாயகி வேடம் இல்லாமல் பர்பாமென்ஸ் ஸ்கோப் உள்ள கதாபாத்திரம் அருந்ததி நாயருக்கு கிடைத்துள்ளதாம். அதனால் சைத்தான் ரிலீசானதும் தனக்கு முன்னணி ஹீரோக்களின் படவாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்து வந்த அவருக்கு, தற்போது விதார்த் நடிக்கும் ஒரு புதிய பட வாய்ப்பும் கிடைத்துள்ளது. கிராமத்து கதையில் உருவாகும் அந்த படம் அக்டோபர் மாதம் தொடங்குகிறதாம்.