ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் தனுஷ் நேற்று (ஜூலை 28) தனது பிறந்த நாளை கொண்டாடினார். தனது வீட்டில், வடசென்னை பட குழுவினருடனும், தனது குடும்பத்தினருடனும் தனுஷ் தனது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடினார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அங்கு வந்த நடிகர் ரஜினிகாந்த், நேரில் வந்து தனுசிற்கு வாழ்த்து கூறி, ஆசீர்வதித்தார். சுமார் 3 மணி நேரம் ரஜினி அங்கு இருந்தார். இது தனுஷிற்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதாக இருந்தது. தனுஷ் பிறந்த நாளுக்கு ரஜினி நேரில் வந்து வாழ்த்துவதும், அதிக நேரம் இருப்பதும் இதுவே முதல் முறையாகும்.
வடசென்னை படக் குழுவினருடனும் ரஜினி பேசி மகிழ்ந்ததுடன், போட்டோ எடுத்துக் கொண்டார். தனுஷ் பெற்றோர்களும் வந்து அவரை வாழ்த்தினர்.