பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
ஓ காதல் கண்மணி படத்தை அடுத்து கார்த்தி நடிப்பில் மணிரத்னம் இயக்கி வரும் படம் காற்று வெளியிடை. இந்த படத்தில் கார்த்தியுடன் அதிதி ராவ், டெல்லி கணேஷ், ருக்மிணி, ஸ்ரதா ஸ்ரீநாத், ஆர்.ஜே.பாலாஜி, லலிதா, விபின் சர்மா உள்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது ஊட்டி, நீலகிரி பகுதிகளில் நடந்து கொண்டிருக்கிறது. இதில் கார்த்தி-அதிதிராவ் சம்பந்தப்பட்ட காட்சிகளைத்தான் படமாக்குகிறாராம் மணிரத்னம்.
மேலும், ஏற்கனவே இந்த படத்திற்காக ஏகப்பட்ட நடிகர் நடிகைகளை ஆடிசன் வைத்து தேர்வு செய்த மணிரத்னத்திற்கு இன்னும் எதிர்பார்த்தபடியான வில்லன் நடிகர் கிடைக்கவில்லையாம். இதுவரை 500-க்கும் மேற்பட்ட வில்லன்களின் போட்டோ மணிரத்னத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டதாம். ஆனபோதும் அவர் எதிர்பார்த்தபடியான முகம் இன்னும் கிடைக்கவில்லையாம். அதனால், அவரது அலுவலகத்தில் இருப்பவர்கள், தென்னிந்தியா மட்டுமின்றி வடஇந்திய வில்லன் நடிகர்களின் போட்டோக்களை தொடர்ந்து வரவைத்து படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் மணிரத்னத்தின் பார்வைக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.