பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
தான் எப்போதும் சூப்பர் ஸ்டார் என்பதை நடிகர் அமிதாப் பச்சன், இந்த வயதிலும் தன் ஒவ்வொரு படத்திலும் நிரூபித்து வருகிறார். இப்போதும் தன் வயதுக்கு ஏற்றபடியான வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார் அமிதாப். தற்போதும் பிஸி நடிகராக வலம் வரும் அமிதாப், யாஸ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்க இருக்கும் ‛தக்' படத்தில் நடிப்பதாக சில மாதங்களுக்கு முன்னர் செய்தி வெளியானது. ஆனால் இப்போது அவர் இப்படத்திலிருந்து விலகிவிட்டார்.
இதுப்பற்றி விசாரித்த போது... ‛தக்' படத்தில் ஹிருத்திக் ரோஷனும் முதன்மையான ரோலில் நடிக்கிறார். ஆனால் தற்போது அவர் ‛காபில்' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி தக் படத்திற்கான கதையும் இன்னும் முழுமையாகவில்லை, இதனால் படப்பிடிப்பு தள்ளிபோய் உள்ளது. இதன்காரமாக அமிதாப் இப்படத்திலிருந்து விலகிவிட்டதாக பாலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.