துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
சுஜித் சிர்கார் இயக்கத்தில் கடந்தாண்டு வெளிவந்த படம் ‛பிக்கு'. அமிதாப், தீபிகா நடித்த இப்படம் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இதே இயக்குநர் மீண்டும் அமிதாப்பை கொண்டு ‛பிங்க்' என்ற படத்தை தயாரித்து வருகிறார். அமிதாப் உடன் டாப்சி முக்கிய ரோலில் நடிக்கிறார். அனிருத்தா ராய் சவுத்ரி இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது.
சமீபத்தில் இப்படத்தின் டிரைலரை அமிதாப் பார்த்துள்ளார். டிரைலரை பார்த்துவிட்டு மிகவும் நெகிழ்ந்து போய், இயக்குநரிடம் அருமையாக இருக்கிறது, இப்படத்தின் ரிலீஸ் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், ‛பிங்க்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்திருக்கிறது. அதன்படி இப்படம் வருகிற செப்., 16ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.