பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அரண்மனை-2, ஜில் ஜங் ஜக் படங்களுக்குப்பிறகு 4 படங்களில் நடித்து வருகிறார் சித்தார்த். ஒரு மலையாளம் படத்திலும் 3 தமிழ்ப்படங்களிலும் நடிக்கிறார்.
அதில் ஒரு படம்தான் சைத்தான் கே பச்சா. ஜிகர்தண்டா போன்று வில்ல னுடன் சித்தார்த் மோதும் கதையில் இப்படம் உருவாகியிருக்கிறது. அப்படி சித் தார்த்துடன் மோதும் வில்லனாக இந்த படத்தில் நடிப்பவர் பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன். இவர் இந்த படத்தின் பிரதான வில்லனாக நடிக்கிறார்.
நூற்றுக்கணக்கான படங்களுக்கு சண்டை பயிற்சி கொடுத்துள்ள சூப்பர் சுப்பராயன் இதற்கு முன்பு, தங்கைக்கோர் கீதம், கன்னிராசி, ஆண்பாவம், இன்னிசை மழை, கொம்பன் என பல படங்களில் நட்புக்காக மற்றும் கேரக்டர் ரோல்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில், இந்த சைத்தான் கே பச்சா படத்தில் அதிரடி வில்லனாக நடிக்கிறாராம். கதைப்படி சூப்பர் சுப்பராயனும், சித்தார்த்தும் மாமன் மச்சான்களாக நடிக்கிறார்களாம். ஆனால் ஒருகட்டத்தில் அவர்களுக்கிடையே எப்படி மோதல் ஏற்படுகிறது என்பதுதான் கதையாம். அதிரடியான ஆக்சன் கதையாக இருந்தபோதும் காமெடி கலந்து கதை சொல்லப்பட்டிருக்கிறதாம்.