அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, இரு வாரங்களாக சிகிச்சை பெற்று வரும் நடிகர் கமல், வீடு திரும்ப, இன்னும் ஒரு வாரத்திற்கு மேல் ஆகும் என, தெரியவந்துள்ளது.
சபாஷ் நாயுடு படத்தின் ஒருபகுதியை அமெரிக்காவில் முடித்துவிட்டு சென்னை திரும்பிய கமல், ஜூலை, 13ம் தேதி இரவு, சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தன் வீட்டு மாடிப்படியில் இறங்கிய போது, தவறி விழுந்தார். இதையடுத்து சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், வலது காலில், கணுக்காலுக்கு மேல் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது.
டாக்டர்கள் குழுவினர் அதற்கான அறுவை சிகிச்சை செய்தனர். கமல், 10 நாட்களில் வீடு திரும்புவார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரு வாரங்களாக சிகிச்சை தொடர்கிறது. கமலுக்கு தொடர் சிகிச்சை தரப்படுகிறது; மருத்துவ குழுவின் கண்காணிப்பில் உள்ளார். அவருக்கு அதிக ஓய்வு தேவை; பூரண நலம் பெற்று வீடு திரும்ப, இன்னும் ஒரு வாரத்திற்கு மேல் ஆகும் என, டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.