Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கபாலி பற்றி விமர்சனம்: கமல் தரப்பு மறுப்பு!

27 ஜூலை, 2016 - 10:03 IST
எழுத்தின் அளவு:
Kamal-denied-review-about-Kabali

ரஜினி நடித்த, கபாலி படம் பற்றி நடிகர் கமல்ஹாசன் எழுதியதாக வலைதளங்களில் போலி விமர்சனம் பரப்பப்பட்டு வருகிறது. இதற்கு கமல் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. வலைதளங்களில், கபாலி படம் குறித்து நடிகர் கமல்ஹாசன் எழுதியதாக வலம் வரும் கடிதம்:


இரண்டு நாட்களாய் முகநுாலில் வந்த அனைத்து விமர்சனங்களையும் படித்துவிட்டு... இரண்டுவித மனநிலையில் இன்று, கபாலி படம் பார்த்தாகி விட்டது. 66 வயதில் ஒருவர், ஆண், பெண், குழந்தைகள் என எல்லா வயதினரையும், காலை, 6:00 மணிக்கே திரையரங்கில் கூட வைப்பது பெரிய சாதனையா என்ன?


இரண்டே இரண்டு, ஷூ போட்ட கால்கள் திரையில் நடந்து வர, இருக்கையில் எவரையும் அமரவிடாமல் செய்வது அதிசயமா என்ன? இப்படித்தான் என்ற இலக்கணத்தை மீறி, எப்படி இருந்தாலும் எம் தலைவன் என உலக அளவில் ரசிகர்களை கொண்டிருப்பது பெரிய புரட்சியா என்ன?


தொடர்ந்து, 35 ஆண்டு காலமாக திரைத்துறையில் வந்து காணாமல் போனவர்கள் பலர்; இன்னும் வந்து கொண்டிருப்பவர்கள் பலர்; இனி வரப் போகின்றவர்கள் பலர். அத்தனை பேருக்கும், ஒரே நோக்கம் அடுத்த, சூப்பர் ஸ்டார் ஆவது தான் என்பதையே எல்லைக் கோடாக நிர்ணயம் செய்தது, ஒரு பெரிய விஷயமா என்ன?


வயதாகி விட்டது; தலையில் முடியில்லை; கறுப்பு நிறம்; தமிழனில்லை; தமிழகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை... இது போன்ற அத்தனை எதிர்ப்புகளுக்கும் ஒற்றை பதிலாய், ஒரே சிரிப்பு. சொல்பவர் அத்தனை பேரும் கண்ணாடி முன் நின்று, தன்னை அலங்கரித்து கொள்ளும்போது நினைத்துக் கொள்வது என்னவோ இவர் உருவத்தை தான்; இது என்ன மாயமோ? உலகத்தரம் என்ற ஒற்றை வார்த்தையை எத்தனையோ பேர் சொந்தமாக்கி கொண்டிருக்கும் போது, உலகத்தை தன் பக்கம் திரும்பிப் பார்க்க செய்வது, ஒரு பெரிய சாதனையா என்ன?


கபாலி... மற்ற படங்களில் வெடிக்கும் ரஜினியின் ஸ்டைல், இதில் மட்டுமே நடித்திருக்கிறது. எடிட்டிங், கதை, தலித்தியம், ரஞ்சித் சரியாக பயன்படுத்தவில்லை, வேகம் குறைவு... என, பல பரிமாணங்களை விமர்சனங்களாக கண்டும், எதுவுமே நெஞ்சில் நிற்கவில்லை, ரஜினியை கண்டபின் என்பதும் உண்மை.


தர்மத்தின் தலைவன், ராஜாதிராஜா, மன்னன், மாப்பிள்ளை, தளபதி, அண்ணாமலை, பாட்ஷா, படையப்பா, எந்திரன், சந்திரமுகி போன்றவைகளை தொடர்ந்து, இன்றும் தொலைந்து போன நம் இளமை காலத்தை தேடிக் கண்டுபிடித்து தருவதென்னவோ இவருக்குத் தேவையில்லாத வேலை தான்.


எது எப்படியோ, 65 வயதில் தாத்தாவும், 45 வயதில் அப்பனும், 15 வயதில் மகனும் நண்பர்களாக தோள் மீது கை போட்டுக் கொண்டு, திரையில் இவரைக் காண்பித்தவுடன், தங்களை மறந்து கைதட்டி கூச்சலிட்டு மகிழ்ந்து வரவேற்பது இவரை மட்டுமே என்பதில் ஐயமில்லை.


அதற்காகவாவது இந்த மனிதர் இன்னும் கொஞ்சம் நுாற்றாண்டுகள்... சூப்பர் ஸ்டாராகவே இருந்துவிட்டு போகட்டுமே... சாதனைகள் சொல்லப்படுவதில்லை; செய்யப்படுகின்றன. தன்னை பிடிக்காதவர்களைக் கூட, தன்னைப் பற்றியே பேச வைப்பது தான் இவர் செய்த மகத்தான சாதனை. இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


இதுப்பற்றி கமல் தரப்பில் விசாரித்தபோது, கமல் இன்னும், கபாலி படமே பார்க்கவில்லை என்பது தான் உண்மை. காலில் பட்ட காயத்திற்காக கமல் தொடர்ந்து சிகிச்சையில் தான் உள்ளார் என, மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in