இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
வேதாளம், தெறி, ஜாக்சன்துரை, தில்லுக்குத்துட்டு, அர்த்தநாரி படங்களைத் தொடர்ந்து நான் கடவுள் ராஜேந்திரன், அரை டஜன் படங்களில் நடித்து வருகிறர்ர. சில படங்களில் முழுகாமெடியன் என்றால், சில படங்களில் காமெடி வில்ல னாகவும் நடிக்கிறார். அந்த வகையில், எந்த மாதிரியான வேடமாக இருந்தாலும் அதில் காமெடி காட்சிகள் அவசியம் இருக்க வேண்டும் என்பதை முன்வைத்தே கேரக்டர்களை ஓகே பண்ணி வருகிறார் அவர்.
மேலும், தண்ணியில கண்டம் போன்ற சில படங்களில் தன்னை முன்வைத்தே பப்ளிசிட்டிகள் செய்யப்பட்டபோது, தனது மார்க்கெட் எகிறி நிற்பதை உணர்ந்த மொட்டை ராஜேந்திரன், ஒரு நாளைக்கு ஒரு லட்சம் என வாங்கி வந்த சம்பளத்தை படிப்படியாக உயர்த்தி 2 லட்சம் வரை வாங்கத் தொடங்கினார். ஆனால், இப்போது மீண்டும் 1 லட்சம் வாங்கி வருகிறார். காரணம், இவரது சம்பளம் எகிறத் தொடங்கியதை அடுத்து மீடியம் பட்ஜெட் படாதிபதிகள் யோகிபாபு, ரோபோ சங்கர், சதீஷ், சிங்கம் புலி போன்ற காமெடியன்களை தேடி செல்லத் தொடங்கி விட்டார்களாம். அதனால், போட்டியை சமாளித்து மார்க் கெட்டில் நீடிப்பதற்காக திடுதிப்பென்று படக்கூலியை குறைத்துள்ளாராம் மொட்டை ராஜேந்திரன்.