ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ராம்கோபால்வர்மா இயக்கிய சத்யா-2 என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானவர் அனைகா. பின்னர் அதே படம் தமிழில் நான்தான்டா என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. அந்த படத்தில் எங்கேயும் எப்போதும் சர்வானந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார் அனைகா. அதையடுத்து சித்தார்த் நடித்த காவியத்தலைவன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் தமிழில் அதர்வா நடித்து வரும் செம போதை ஆகாத என்ற படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார்.
குடி போதையினால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு கதையில் உருவாகியிருக்கும் இந்த படத்தில், ஒரு விலைமாது வேடத்தில் நடித்திருக்கிறாராம் அனைகா. இந்த வேடத்தில் நடிக்க ஆடிசன் நடந்தபோது பல நடிகைகள் கலந்து கொண்டார்களாம். அவர்களில் விலைமாதுவுக்கான பாடிலாங்குவேஜ் அனைகாவுக்குத்தான் பொருந்தியதாம். அதனால் அவரை முக்கியத்துவம் வாய்ந்த அந்த வேடத்தில் நடிக்க வைத்துள்ளாராம் டைரக்டர் பத்ரி. அந்த வகையில், குடிபோதையில் அதர்வா விலைமாதுவிடம் செல்லும் சில படுக்கையறை காட்சிகளும் இந்த படத்தில் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.