ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு அடுத்த நம்பர் 1 நடிகை தமன்னாதான் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் திடீரென தமிழ் சினிமாவை விட்டு காணாமல் போனார் தமன்னா. அதன் பின் 'பாகுபலி' படம் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அடுத்து வெளிவந்த 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' அவருக்குத் தோல்வியாக அமைந்தாலும், இந்த வருடம் வெளிவந்த 'தோழா' தமன்னாவை மீண்டும் தமிழ் சினிமாவுக்குள் தோள் கொடுத்து வரவைத்துவிட்டது.
அடுத்தடுத்து சில தமிழ்ப் படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். விஜய் சேதுபதியுடன் 'தர்மதுரை', பிரபுதேவாவுடன் 'தேவி', விஷாலுடன் 'கத்திச் சண்டை' என நடிக்க ஆரம்பித்தார். இவற்றில் 'தர்மதுரை, தேவி' படங்கள் படப்பிடிப்பு முடிந்துவிட்டன. 'கத்திச் சண்டை' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் 'தர்மதுரை' படமும், செப்டம்பர் மாதத்தில் 'தேவி' படமும், அக்டோபர் மாதத்தில் 'கத்திச் சண்டை' படமும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'பாகுபலி 2' படம் அடுத்த வருடம் வெளிவரலாம்.
தமிழில் மீண்டும் பிஸியாகியுள்ள தமன்னா தொடர் வெளியீடுகளின் மூலம் தனது இடத்தை இங்கு தக்க வைத்துக் கொள்வார் என எதிர்பார்க்கலாம்.