பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கயல் சந்திரன், சாத்னா டைட்டஸ் இணைந்து நடிக்கும் படம் 'திட்டம் போட்டு திருடுற கூட்டம்'. சுதர் என்ற புதுமுகம் இயக்குகிறார். ஜோ மார்ட்டின் ஒளிப்பதிவு செய்கிறார். அஷ்வத் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்புகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. இதில் பார்த்திபன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அதுவும் தான் வடிமைத்து வித்தியாசமான கெட்-அப்பில்.
இதுகுறித்து தயாரிப்பாளர் பி.எஸ்.ரகுநாதன் கூறியதாவது: எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் சரி. அதை அப்படியே உள்வாங்கி திரையில் பிரதிபலிக்கும் திறமை பார்த்திபன் சாருக்கு உண்டு. இந்த கதாப்பாத்திரத்தை பற்றி இயக்குனர் சுதர் என்னிடம் விவரிக்கும் போதே, பார்த்திபன் சார் தான் இதற்கு சரியான நபர் என்பதை நாங்கள் முடிவு செய்துவிட்டோம். அதேபோல் அவருக்கும் இந்த கதாப்பாத்திரம் ரொம்பவே பிடித்து போய்விட்டது. இந்த கதாப்பாத்திரத்திற்கான கெட்டப்பை உருவாக்கியதே பார்த்திபன் சார் தான். அதுமட்டுமின்றி தமிழ் திரையுலகின் மூத்த இயக்குனர் என்ற வரிசையில், பல யோசனைகளையும், கருத்துகளையும் பார்த்திபன் சார் எங்களுக்கு வழங்கியது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.