வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
நடிகை ரோஜா சினிமாவில் மார்க்கெட் குறைந்ததும், அப்படியே ஆந்திர அரசியலுக்குச் சென்று விட்டார். இப்போதும் ஆந்திராவில் பரபரப்பான அரசியல்வாதி. ஆனாலும் இடையிடையே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நடத்துவார். தமிழில் 'லக்கா கிக்கா' என்ற கேம் ஷோ நிகழ்ச்சியை நடத்தினார். தற்போது ஜீன்ஸ் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். தற்போது தெலுங்கில் ஒளிபரப்பாகும் ஜெமினி டி.வியில் 'ரக்சா பந்தா' என்ற நிகழ்ச்சியை நடத்துகிறார். இது லக்கா கிக்கா போன்ற கேம் ஷோ அல்ல. குடும்ப பிரச்னைகளில் எது தவறு எது சரி என்று ஆராயும் நிகழ்ச்சி. கிட்டத்தட்ட 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சி போன்றது. நாளை முதல் ஒளிபரப்பாகிறது. தெலுங்கை தாய்மொழியாக கொண்ட ரோஜாவின் சரளமான தெலுங்கு உச்சரிப்பு அங்கு பேமஸ் என்பதால் நிகழ்ச்சியும் களைகட்டத் தொடங்கியிருக்கிறது. ஒரு தமிழ் நிகழ்ச்சி நடத்தவும் பேச்சவார்த்தை நடந்து வருகிறது.