'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
டாக்டர் ராஜசேகரின் தங்கை மகன் மதன். இவர் '88' என்ற படத்தின் மூலம் இயக்குனர் மற்றும் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக 2015ம் ஆண்டின் 'மிஸ் இந்தியா ஏசியா' டைட்டில் வென்ற உபாஷ்னாராய் நடிக்கிறார். இவர்கள் தவிர ஜெயபிரகாஷ், டேனியல் பாலாஜி, மீரா கிருஷ்ணன், பவர் ஸ்டார் சீனிவாசன், அப்புகுட்டி உள்பட பலர் நடிக்கிறார்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். தயாரத்னம் இசை அமைக்கிறார். ஜே.கே.மூவீ மேக்கர்ஸ் சார்பில் ஏ.ஜெயகுமார் தயாரிக்கிறார்.
இன்றைய சமுதாயத்தில் தொழில்நுட்பம் அபார வளர்ச்சி அடைந்துள்ளது. அது எந்த அளவிற்கு மனிதகுலத்துக்கு நன்மையை தருகிறதோ அந்த அளவிற்கு தீமையையும் தருகிறது. பாரம்பரியமாக கட்டிகாத்து வந்த கலாச்சாரத்தை சீரழிக்கிறது. ஒவ்வொரு மனிதர்களுக்கும் ரகசியம் உண்டு. அந்த ரகசியம் அவர்களோடு இருக்கும் வரைதான் பாதுகாப்பு, வெளியே வந்தால் ஆபத்து. இப்போது ரகசியம் என்பதே இல்லை. யார் ரகசியம் எப்போது வெளிவருமோ என்ற நிலை. எப்போதும் ஒரு கேமராவால் கண்காணிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். இதன் விளைவுகளை ஒரு கமர்ஷியல் சினிமாவாக உருவாக்கி தருகிறோம் என்கிறார் இயக்குனர் மதன்.