ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அசால்ட் புரொடக்ஷன் சார்பில் பாபி சிம்ஹா தயாரித்து நடிக்கும் படம் 'வல்லவனுக்கும் வல்லவன்'. இதில் ஷிவதா, பூஜா தேவரியா ஹீரோயினாக நடிக்கிறார்கள். தேனாண்டாள் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது. விஜய் தேசிங்கு என்ற புதுமுகம் இயக்குகிறார்.
இந்தப் படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. 'கோ 2', 'இறைவி' படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாததாலும் 'மீராஜாக்கிரதை', 'மெட்ரோ' படங்களில் சிறிய கேரக்டரில் நடித்ததாலும், 'பாம்பு சட்டை' படம் தாமதமாகிக் கொண்டு வருவதாலும் இந்த படம் பாபி சிம்ஹாவுக்கு முக்கியமான படமாகும். அதனால் இந்த படத்திற்காக ரொம்பவே மெனக்கெடுகிறார். படத்தில் 11 கெட்அப்களில் நடித்துள்ளார். படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. வருகிற ஆகஸ்ட் 2ந் தேதி டீசரையும், அதன் பிறகு பாடல்களையும் வெளியிட்டு செப்படம்பரில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்.