பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வெண்ணிலா கபடிக்குழு படத்தின் வெற்றிக்குப்பிறகு பல படங்களில் நடித்த விஷ்ணுவுக்கு முண்டாசுப்பட்டி படம் வெற்றியாக அமைந்தது. அதையடுத்து, ஜீவா, இன்று நேற்று நாளை படங்களும் ஓரளவு வெற்றிபெற்ற நிலையில், எழில் இயக்கத்தில் நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படம் அவரது சமீபத்திய ஹிட் படமாக அமைந்துள்ளது. விளைவு, தற்போது விஷ்ணுவின் கைவசம் வீர தீர சூரன், மாவீரன் கிட்டு, போடா ஆண்டவனே என் பக்கம் உள்பட 4 படங்கள் உள்ளன. இதனால் திடீரென்று பிசி நடிகராகியிருக்கிறார் விஷ்ணு.
மேலும், இதுவரை விஷ்ணுவை பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்த கோலிவுட் டைரக்டர்கள் பலரும் இப்போது அவரிடம் கதை சொல்ல படையெடுத்து வருகின்றனர். முக்கியமாக சில முன்வரிசை ஹீரோக்களின் கால்சீட் கிடைக்காத டைரக்டர்களாக அவரை தேடிச்செல்கின்றனர். அவர் அவுட்டோரில் இருந்தாலும் தேடிச்சென்று கதை சொல்லி வருகிறார்கள். இப்படி தனக்கு ஏற்பட்டி ருக்கும் வரவேற்பினை கருத்தில் கொண்டு, இதுவரை தனது சம்பள விசயத்தில் அடக்கிவாசித்து வந்த விஷ்ணு, தற்போது சம்பளத்தை ஒரு கோடியாக உயர்த்தி விட்டிருக்கிறார்.