சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
சந்தானம் ஹீரோவானதை அடுத்து அதிகப்படியான படங்களில் முக்கிய காமெடியனாக நடித்து வருகிறார் சூரி. அந்த வகையில், இந்த ஆண்டு தொடக் கத்தில் 14 படங்களை கைவசம் வைத்திருந்த அவர், தற்போது 9 படங்களை வைத்திருக்கிறார். இந்த படங்களுக்காக அடுத்து ஆண்டு முழுக்க அவர் கால்சீட் கொடுத்திருக்கிறாராம். இதற்கிடையே ரெண்டு நாள், மூனு நாள் கேப் கிடைக்கும்போது சில படங்களை முடித்துக்கொடுக்கும் அவர், மொத்தமாக 40 நாள் கால் சீட்டை தனியாக எடுத்து வைத்திருக்கிறாராம்.
இந்த கால்சீட் அவரது அபிமானத்திற்குரிய சுசீந்திரன் போன்ற டைரக்டர்கள் அல்லது விஷால், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் யாராவது கேட்டால் கொடுப்பதற்காக வைத்திருக்கிறாராம். மேலும், இதற்கு முன்பெல்லாம் மற்ற காமெடியன்கள் இருக்கும் படங்களில் நடிக்க கால்சீட் கொடுத்து வந்த சூரி, இப்போது அந்த கொள்கையில் இருந்து மாறி, படம் முழுக்க ஹீரோவுடன் தான் மட்டுமே பயணிக்கும் படங்களுக்கே முதலிடம் கொடுக்கிறார். அதுவும் முன்னணி ஹீரோக்களுக்குத்தான் முன்னுரிமையாம். தற்போதைய நிலவரப்படி சூரியே முன்னணி காமெடியனாக இருப்பதால் அவர் கால்சீட் கொடுக்கும் தேதிவரை முன்னணி ஹீரோக்களே காத்திருந்து நடித்து வருகிறார்கள். அந்த அளவுக்கு மோஸ்ட் வான்டட் காமெடியனாகியிருக்கிறார் சூரி.