‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
'கபாலி'யின் ஆரவாரம் அது எட்ட வேண்டிய உயரத்தைத் தொடும் வரை ஒலித்துக் கொண்டேதான் இருக்கும். ஆனாலும், அடுத்த வாரம் பிறக்க இருக்கும் ஆகஸ்ட் மாதத்திற்கு திரையுலகம் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆகஸ்ட் 5ம் தேதி 'திருநாள், சண்டிக்குதிரை' ஆகிய படங்கள் வெளிவருவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டது. ஆகஸ்ட் 12ம் தேதி 'வாகா' படம் வரும் என்று அறிவிக்கப்பட்டு விட்டது. அதே தேதியில் தனுஷ் நடித்த 'தொடரி' வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
படங்கள் வெளியீடு இல்லாமல் சில படங்களின் டீசர், டிரைலர், இசை வெளியீடுகளும் நடக்க உள்ளன. 'இருமுகன்' படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு ஆகஸ்ட் 2ம் தேதி வெளியாக உள்ளது. விஜய் சேதுபதி, தமன்னா நடித்துள்ள 'தர்மதுரை' படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு ஆகஸ்ட் 3ம் தேதி வெளியாக உள்ளது. அதைத் தொடர்ந்து அவர் நடித்துள்ள 'றெக்க' படத்தின் இசை வெளியீடும் நடைபெற வாய்ப்புள்ளது. மேலும் செப்டம்பர், அக்டோபர் மாதம் வெளியாக உள்ள படங்களின் டீசர், டிரைலர் வெளியீடுகளும் அடுத்தடுத்து நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.
ஆகஸ்ட் மாதம் அஜித் நடிக்கும் புதிய படத்தின் படம் ஆரம்பமாக உள்ளது. ஆடி மாதம் ஆகஸ்ட் 16ம் தேதிதான் முடிவடைகிறது. அதற்கடுத்தும் இன்னும் அதிகமான விழாக்களின் அறிவிப்புகளும், பட வெளியீடு அறிவிப்புகளும் வெளியாகலாம். மொத்தத்தில் ஆகஸ்ட் மாதம் ஒரு ஆரவாரமான மாதமாக இருக்கப் போகிறது.