தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கபாலி' படம் கேரளாவில் ரிலீசானாலும் ஆனது.. நம்ம ஊர் மீடியாக்களுக்கு போட்டியாக அங்கே மலையாள மீடியாக்களும் கடந்த ஒரு மாதமாகவே 'கபாலி'யை உயர்த்தி பிடித்தன. அதிலும் மோகன்லால் வேறு இந்தப்படத்தை வாங்கி வெளியிட்டார் என்பதால் கூடுதலான பப்ளிசிட்டி கொடுக்கப்பட்டது.. அதுமட்டுமல்ல, இதுவரை இல்லாத அளவுக்கு 306 தியேட்டர்களில் 'கபாலி' திரையிடப்பட்டது. இது பல மலையாள சினிமா பிரபலங்களின் கண்களை உறுத்தவே செய்தது.. அந்த கூட்டத்தில் மலையாள இயக்குனர் வினயனும் ஒருவர். இவர் மலையாள இயக்குனர் தான் என்றாலும் தமிழில் காசி, என் மன வானில், அற்புத தீவு என சில படங்களை இயக்கிவர் தான். ஆனாலும் மலையாள சினிமா பாசம் இவரை விடவில்லை.