ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, த்ரிஷா மாதிரியான நடிகைகளுக்குத்தான் லட்சக் கணக்கில் பேஸ்புக் பாலோயர்கள் இருப்பார்களா. இதோ சிறு பட்ஜெட் படங்களின் ஆஸ்தான நாயகி அருந்ததி, 20 லட்சம் பாலோயர்களை பேஸ்புக்கில் எட்டிப்பிடித்திருக்கிறார்.
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய 'வெளுத்துக்கட்டு' படத்தின் மூலம் அறிமுமான அருந்ததி 'சுண்டாட்டம்', 'நேற்று இன்று', 'நாய்கள் ஜாக்கிரதை', 'தொட்டால் தொடரும்', 'அர்த்தநாரி' உள்பட 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்து விட்டார். தற்போது தெலுங்கு படத்திலும் அறிமுகமாகியிருக்கிறார். நாகேஸ்வரரெட்டி இயக்கத்தில் அல்லரி நரேஷ் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் அழகான பேயாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் அருந்ததி.