ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அழகிய தமிழ் மகன் படத்தை அடுத்து பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 60-வது படத்தின் வேலைகள் துரிதமாக நடந்து வருகிறது. முதன்முறையாக விஜய் முழு கிராமத்து கதையில் நடிக்கிறார். அந்த வகையில் பங்காளி சண்டையே இந்த படத்தின் பிரதானமாகியிருக்கிறதாம். கிராமத்து அப்பாவியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு விஜய்யை உறவுக்காரர்களே ஏய்த்துக்கொண்டிருப்பார் களாம். நகரத்தில் இருந்து கிராமத்துக்கு வரும் விஜய்க்கு இந்த விசயம் தெரிய வரும்போது அப்பாவி விஜய்க்காக சாட்டையை கையிலெடுப்பாராம்.
இப்படித்தான் எங்க வீட்டுப்பிளை படத்திலும் அப்பாவி எம்ஜிஆரை நம்பியார் சாட்டையால் அடி அடியென்று அடக்கி வைத்திருப்பார். அதையடுத்து, துணிச்சலான இன்னொரு எம்ஜிஆர் அவர் இடத்துக்கு சென்று நம்பியாரை பின்னி எடுப்பார். அந்தவகையில், அந்த பாணியில்தான் விஜய் படத்தின் கதையும் உருவாகியிருக்கிறதாம். மேலும், இந்த படத்திற்கு எம்ஜிஆர் படத்தின் தலைப்பினை வைப்பதற்கு தயாரிப்பாளர் தரப்பு ஏற்கனவே முடிவு செய்தபோதும் விஜய்க்கு ஓகே இல்லாமல் இருந்து வந்தது. ஆனால் இப்போது படத்தின் கதையோட்டத்தைப் பார்க்கையில் அந்த டைட்டீல்தான் பொருத்தமாக இருக்கும் என்று ஓகே பண்ணி விட்டாராம் விஜய். ஆக, எங்கவீட்டுப்பிள்ளை என்ற டைட்டீல் விரைவில் விஜய் 60-வது படத்தின் பர்ஸ்ட் லுக்கோடு அறிவிக்கப்பட உள்ளதாம்.