இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
நடிகை கரீனா கபூர் கர்ப்பமாக இருப்பதாகவும், இருவருக்கும் டிசம்பர் மாதம் முதல் குழந்தை பிறக்கும் என எதிர்பார்ப்பதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் சைப் அலி கான் அறிவித்திருந்தார். கர்ப்பமாக இருப்பதால் புதிதாக எந்த பணியில் கரீனா ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை. ஆனால், கரீனா கபூர் கான் தனது சூட்டிங் ஒப்பந்தங்களில் பிசியாக இருப்பதாக இப்போது கூறப்படுகிறது. அத்துடன் தனது அடுத்த படமான வீரே தில் வெட்டிங் படத்தின் சூட்டிங்கை கத்ரீனா விரைவில் துவக்க உள்ளாராம். இது பற்றி கரீனா கபூரிடம் கேட்டதற்கு, நாம் திருமணம் செய்து கொண்டவுடன், இனி நான் நடிக்க மாட்டேன் என பலரும் கூறினர். பாலிவுட்டில் திருமண வாழ்க்கையையும், நடிப்பையும் முழு மூச்சாக, சமமாக கொண்டு செல்லும் நடிகைகளில் பட்டியலில் நான் தான் முதன்மையாக இருப்பேன் என நினைக்கிறேன். இதில் நானும் சைப்பும் ஒரே மாதிரி தான் இருக்கிறோம். நடிப்பை விட்டு விடும்படி சைப் என்னிடம் ஒரு போதும் கூறியதில்லை. சைப் ஒரு மாடர்ன் மனிதர். நான் மட்டுமே வேலைக்காக வெளியே செல்ல வேண்டும், நீ வீட்டிலேயே இருக்கு வேண்டும் என நினைத்தால் நான் சுயநலவாதி என சைப் என்னிடம் கூறுவார் என்றார்.