நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
பாகுபலி படத்தில் கவர்ச்சி கலந்த ஆக்ஷனில் ரசிகர்களைக் கவர்ந்த தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பிசியாகியுள்ளார். தமிழில் தமன்னா விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ள தர்மதுரை திரைக்கு தயாராகி வருகின்றது. மேலும் பிரபுதேவாவுடன் தமன்னா ஜோடி சேர்ந்து நடிக்கும் திகில் திரைப்படம் ஹிந்தி, தமிழ் தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளிவரவுள்ளது.
இதனிடையே ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் ஜனதா கேரேஜ் திரைப்படத்தில் தமன்னா குத்தாட்டம் போடவுள்ளார். ஒரே இரவில் இப்பாடலை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ஜூனியர் என்.டி.ஆருடன் தமன்னா ஆடவிருக்கும் ஒரு பாடலுக்கு சம்பளமாக தமன்னாவிற்கு ரூ 42 லட்சம் பேசப்பட்டுள்ளதாம். தெலுங்கில் தமன்னாவின் பல குத்தாட்ட பாடல்கள் வெற்றி பெற்றதால் குத்தாட்ட பாடலுக்கான சம்பளத்தை அவர் உயர்த்தி விட்டாராம். விரைவில் இப்பாடலுக்கான படப்பிடிப்பு நடக்கவுள்ளது. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிக்கும் ஜனதா கேரேஜ் படத்தை இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்குகின்றார்.