அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
'கபாலி' படம் ரஜினிகாந்த் என்ற சூப்பர் ஸ்டாரின் 'ஒன் மேன் ஷோ' அந்தஸ்தால் இவ்வளவு வியாபாரம், பரபரப்பு, விவாதம், வசூல் என பல தளங்களையும் செய்திகளால் நிரப்பிக் கொண்டிருக்கிறது. ரஜினிகாந்துக்கு இனி யாரும் திருப்புமுனையைத் தர வேண்டியதில்லை. அவரால்தான் திருப்புமுனையைப் பெற்றவர்கள் ஏராளம். தயாரிப்பாளர்களிலிருந்து, இயக்குனர்கள், தன்னுடன் நடித்த நட்சத்திரங்கள் என பலருக்கும் அவரால் ஒரு திருப்புமுனை நிகழ்ந்து பின்னர் அவர்களுக்கு என தனி அடையாளம் கிடைத்திருக்கிறது. அதை வெளிப்படையாகச் சொன்னவர்கள் அதிகம், சொல்லாமல் மறைத்தவர்களும் அதிகம். 1980-லிருந்து இன்று வரை சுமார் 36 வருடங்களாக திரையுலகத்தில் வசூல் மன்னனாக இருப்பது இனி வேறு ஒரு நடிகருக்குக் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.
'கபாலி' படத்தில் ரஜினிகாந்தைத் தவிர படத்தில் நடித்துள்ள பலரும் ஒரு திருப்புமுனைக்காகக் காத்திருப்பவர்கள்தான். பொதுவாக ரஜினி படம் என்றாலே காலத்திற்கேற்ப இயக்குனர்களும், இசையமைப்பாளர்களும், உடன் நடிக்கும் மற்றவர்களும் அவருக்குரிய அந்தஸ்தில் இருப்பவர்களாலேயே நிரப்பப்படுவார்கள். ஆனால், பா.ரஞ்சித் அப்படிச் செய்யாமல் தன்னுடன் கடந்த இரண்டு படங்களில் பணிபுரிந்த பலருக்கம் 'கபாலி' படத்தில் வாய்ப்பளித்து அதை தன் படமாகவும் பேச வைக்க முயற்சி எடுத்த போதே பாராட்டப்பட்டார். இரண்டு படம் முடித்த எந்த இயக்குனர்களுக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பாக ரஜினியை வைத்தே பரபரப்பாக ஒரு படத்தைக் கொடுத்த பா.ரஞ்சித்துக்கு இந்தப் படம் எப்படிப்பட்ட திருப்புமுனையைத் தரப் போகிறது.
இந்தப் படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் ஆன உடனே சந்தோஷ் நாராயணனுக்கு விஜய்யின் புதிய படத்திலும் தனுஷின் புதிய படத்திலும் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தில் நாயகியாக நடித்துள்ள ராதிகா ஆப்தே இதற்கு முன் 'தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிசெல்வன்' ஆகிய படங்களில் நாயகியாக நடித்துள்ளார். அந்தப் படங்கள் அவருக்கு தோல்விப் படங்களாகவே அமைந்தன. 'கபாலி' அவருக்கு திருப்புமுனையைத் தருமா என்பது இனிதான் தெரிய வரும். அதே போல பா.ரஞ்சித்தின் ஆஸ்தான நட்சத்திரங்களான “அட்டகத்தி தினேஷ், கலையரசன், ரித்விகா, மைக் கோபி” உள்ளிட்டவர்களும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். அவர்களுடன் சாய் தன்ஷிகா, ஜான் விஜய், கிஷோர் மற்றும் சில காட்சிகளில் வந்தாலும் யார் இவர்கள் என பேச வைத்தவர்கள் என யாருக்கு திருப்புமுனையாக அமையப் போகிறது என்பதை அடுத்து அவர்களுக்குக் கிடைக்கப் போகும் வாய்ப்புகளை வைத்துத் தெரிந்து கொள்ளலாம்.