ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ள சூப்பர்ஸ்டார் ரஜினியின் 'கபாலி' படம் கேரளாவில் மட்டும் 306 தியேட்டர்களில் வெளியாகியுள்ளது.. இதுநாள் வரை விஜய், விக்ரம் படங்கள் கேரளாவில் ரிலீஸான தியேட்டர்களின் எண்ணிக்கை 220ஐ தாண்டியிராத நிலையில் 'கபாலிக்கான தியேட்டர் ரெக்கார்டு நிச்சயம் கேரள மண்ணில் புதிய சாதனை தான். இந்த சாதனை இந்தப்படத்தை வாங்கி வெளியிடுபவர் மோகன்லால் என்பதால் தான் சுலபமாக சாத்தியமானது. இந்தப்படத்தை மோகன்லாலின் ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனம் தான் கேரளாவில் வெளியிட்டுள்ளது.
இது ஒருபக்கம் இருக்க, கடந்த ரம்ஜான் ரிலீஸாக வெளியான சில படங்கள், இரண்டு வாரங்கள் மட்டுமே ஓடியிருந்த நிலையில் 'கபாலி' என்கிற யானையின் காலில் சிக்கி சிதைந்துள்ளன என்பதும் மறுக்க முடியாத உண்மை.. ஏற்கனவே பெண்களை இழிவுபடுத்தியது என்கிற சர்ச்சையில் சிக்கிய மம்முட்டியின் 'கசபா' படம் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் தினசரி நான்கில் இருந்து மூன்று காட்சிகளாக குறைக்கப்பட்டுள்ளது. மஞ்சு வாரியர் நடித்த 'கரிங்குன்னம் சிக்சஸ்' படத்துக்கும் இதே நிலைதான்.. பிஜுமேனன், ஆசிப் அலி இணைந்து நடித்த 'அனுராக கரிக்கின் வெள்ளம்' படம் மட்டும் வரவேற்பு குறையாமல் இருப்பதால் 'கபாலி' தாக்கத்தில் இருந்து தப்பித்து தியேட்டர்களின் எண்ணிக்கை குறையாமல் ஓடிக்கொண்டு இருக்கிறது.