மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பாலிவுட்டின் முன்னணி நடிகராக திகழ்ந்த விவேக் ஓபுராய், முன்பு அளவுக்கு அதிக படங்களில் நடிக்கவிட்டாலும் கூட அவ்வப்போது படங்களில் தொடர்ந்து நடித்து வருகின்றனர். இவர் அடுத்தப்படியாக பிரபல சர்ச்சை இயக்குநர் ராம்கோபால் வர்மா இயக்க உள்ள கன்னட படமான ‛ராய்' படத்தில் நடிக்க இருக்கிறார்.
இதில் விவேக் ஓபுராய், கன்னட டானாக முத்தப்பா ராய் வேடத்தில் நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தில் விவேக் கன்னட வசனம் பேச இருக்கிறார், அதுமட்டுமின்றி கன்னடத்தில் சொந்தமாக வசனமும் பேச உள்ளார். இதற்காக கன்னட மொழி பேச தன் மனைவி பிரியங்கா மூலமாக பயிற்சி எடுத்து வருகிறார் பிரியங்கா, பெங்களூரை சேர்ந்தவர் என்பதால் அவரிடம் முறைப்படி பயிற்சி எடுத்து வருகிறார்.
இதுகுறித்து விவேக் ஓபுராய் கூறியிருப்பதாவது... முத்தப்பா ராய் கேரக்டருக்காக நான் கன்னடம் பேசுவது அவசியமாகியுள்ளது. கன்னட மொழி பேசுவது சிரமமான ஒன்று தான். ஆனால் நான் என் வீட்டிலேயே இந்த மொழியை கற்று வருவது மகிழ்ச்சி, அதுவும் என் மனைவி மூலமாக கற்பது இன்னும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.