ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கோலிவுட்காரர்கள் கடந்த இரண்டு வருடங்களாக பேயை காட்டி பயமுறுத்தி வருகிறார்கள். அதுபோதாது என்று அவ்வப்போது ஹாலிவுட்காரர்களும் தங்கள் பங்குக்கு பயமுறுத்தி வருகிறார்கள். கடைசியாக 'கான்ஜூரிங் பார்ட் 2' பயமுறுத்திச் சென்றது. அடுத்து வருகிறது 'லைட்ஸ் வுட்'.
டேவிட் எஃப்ட் சாண்ட்பெர்க் என்பவர் இயக்கிய குறும்படம் யூ டியூப்பில் வைரலாகி பயமுறுத்தியது. அதைய கொஞ்சம் நீட்டி திரைப்படமாக்கி விட்டார். அவரே இயக்கியும் உள்ளார். தெரசா பால்மர், கேப்ரியல் பேட்மேன், பில்லி பர்க், மரியா பெல்கோ உள்பட பலர் நடித்துள்ளனர். இருளை கண்டு பயப்படும் வியாதி கொண்ட ரெபேக்கா அதேபோன்ற ஒரு வியாதி தன் தம்பிக்கும் இருப்பதை அறிகிறார். தன் நோயை மறைத்து தன் தம்பி நோயை எப்படி குணப்படுத்துகிறார் என்பதுதான் கதை. தம்பிக்கு தைரியமூட்டுவதற்காக நம்மை பயமுறுத்துவதுதான் திரைக்கதை. வருகிற 29ந் தேதி உலகம் முழுவதும் வெளிவருகிறது. இந்தியாவில் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. ஆங்கிலத்துடன் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளிவருகிறது.