பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இந்தக்காலத்தில் சில நடிகர்கள் தாங்கள் நடிக்கும் படத்தையே புரொமோட் பண்ணுவது கிடையாது. அப்படியிருக்க ஒரு முன்னணி நடிகர், மற்றொரு முன்னணி நடிகரின் படத்தை புரொமோட் பண்ணுகிறேன் என்று கூறியிருக்கிறார். அவர் தான் நடிகர் அஜய் தேவ்கன். தற்போது அஜய், ‛சிவ்வாய்' எனும் பிரமாண்ட படத்தை நடித்து, இயக்கி, தயாரித்து வருகிறார். இப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் அமீர்கான், மாவீரர் போகத்தின் வாழ்க்கை வரலாற்று படமான டங்கல் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் மல்யுத்தம் சம்பந்தப்பட்ட படம் என்றாலும் பெண்களின் வலிமையை போற்றும் படமாக அமைய உள்ளது. பெண்களை போற்றும், பெண் பெருமையை பேசப்போகும் படமாக இருப்பதால் இப்படத்தை தானே புரொமோட் செய்வதாக கூறியிருக்கிறார் அஜய்.
இதுகுறித்து அஜய், தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது... ‛‛எப்போதும் நான் பெண்களுக்காக குரல் கொடுப்பவன், டங்கல் படம் பெண்ணின் பெருமையை, வலிமையை போற்றும் படமாக இருந்தால் நிச்சயம் நான் அந்தப்படத்தை புரொமோஷன் செய்வேன் என்று கூறியிருக்கிறார்.