சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
தனு வெட்ஸ் மனு, தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ், ராஞ்சனா போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ஆன்ந்த எல் ராய், அடுத்தப்படியாக ஷாரூக்கானை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் ஷாரூக்கான் குள்ள நடிகராக நடிக்க உள்ளார். ஹீரோயின்களாக கத்ரீனா கைப், கங்கனா ரணாவத், தீபிகா படுகோனே, ஆலியா பட் என பல நடிகைகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது. இறுதியில் ஆலியா பட் நடிக்க இருப்பதாக செய்திகள் வந்தது. ஆனால் இயக்குநர் ஆன்ந்த எல் ராயோ, ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை என்று கூறியிருக்கிறார்.
ஆனந்த் எல் ராய் தயாரிக்கும் ஹேப்பி பாக் ஜெயகி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் மும்பையில் நடந்தது. அப்போது செய்தியாளர்கள் ஷாரூக் படம் பற்றி கேட்டபோது பேசிய ஆனந்த், ஆமாம் நான் ஷாரூக்கானின் படத்தை இயக்க உள்ளேன். தற்போது கதை உருவாக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஹீரோயின் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை என்றார்.