Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'கபாலி' - முதல் நாள் நிலவரம் என்ன ?

23 ஜூலை, 2016 - 10:44 IST
எழுத்தின் அளவு:
Kabali-first-day-resuly

'கபாலி' படம் வெளியீட்டிற்கு முன் எந்த அளவிற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோ அதே அளவிற்கு முதல் நாள் காட்சிகளிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ரஜினி படங்கள் வெளியாகும் தினத்தில் வழக்கமாக நடக்கும் கொண்டாட்டங்களுடன் நேற்றைய முதல் நாள் காட்சிகள் நடந்தன.


நீதிமன்ற உத்தரவை மீறியும் படங்கள் காலையிலேயே இணையதளங்களிலும், டோரன்ட் என அழைக்கப்படும் தளங்களிலும் வெளியானது படக்குழுவினர் உட்பட திரையுலகத்தைச் சேர்ந்த பலருக்கும் அதிர்ச்சியைத் தந்தது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு தயாரித்த படம், இந்திய நடிகர்களில் அதிகம் பேசப்படும் நடிகரான ரஜினிகாந்த் நடித்த ஒரு படத்திற்கே இந்த நிலைமை என்றால் மற்ற படங்களின் கதி என்ன என கலங்கிப் போய்விட்டார்கள். தடை செய்யப்பட்ட இணையதளங்களில் பல உடனுக்குடன் தடை செய்யப்பட்டாலும், சில இணையதளங்கள் தடை செய்யப்படாமலும், 'கபாலி' படத்துடனும் இருந்தது.


படத்திற்கான முன்பதிவு சென்னை உட்பட சில பெருநகரங்களில் 10 நாட்களுக்கு செய்யப்பட்டுவிட்டதால் அவர்களுக்கு வருமானத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை. சில சிறிய ஊர்களில் அதிக விலை கொடுத்து திரையிட்டவர்கள் எப்படி வசூலை அள்ளப் போகிறார்கள் என்பது இன்னும் சில நாட்களுக்குள் தெரிந்துவிடும்.


நேற்று ஒரு நாள் படத்தின் டிக்கெட் விலை ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு விதமாகவும், ஒவ்வொரு தியேட்டரில் ஒவ்வொரு விதமாகவும் விற்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பதை யாராலும் சரியாக கணித்துக் கூட கூற முடியாது. ஆனாலும், இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு மாபெரும் வசூல் கிடைத்திருக்கும் என்றுதான் கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.


அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளில் வசூலாகும் தொகைகளில் எந்த முரணும் இருக்க வாய்ப்பில்லை. அவை மிகவும் துல்லியமாக இருக்கும். அதனால் வெளிநாடு வசூல் விவரங்கள் மிகச் சரியாகவே இருக்கும். நேற்றைய நிலவரப்படி 20 லட்சம் யுஎஸ் டாலர்கள் வசூல் ஆனதாக அங்கு படத்தை வெளியிட்டுள்ள சினி கேலக்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று அமெரிக்கா, கனடா வசூல் நிலவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறோம் என அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


தமிழ்நாட்டில் நேற்றைய முதல் நாள் வசூலில் கண்டிப்பாக பெரிய வசூல் ஆகியிருக்கும் என்றுதான் பலதரப்பிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தைப் பற்றிய விமர்சனங்கள், சமூக வலைத்தள கருத்துக்கள், மற்ற நடிகர்களின் ரசிகர்கள் பரப்பும் கருத்துக்கள் ஆகிய எதுவும் வசூலை எந்த விதத்திலும் பாதிக்காது என்றே சொல்கிறார்கள். ஒவ்வொரு பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளிவரும் போது இப்படித்தான் பலவிதமான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. ‛தெறி, வேதாளம்' ஆகிய படங்களும் கூட அவற்றைக் கடந்துதான் வெற்றி பெற்று வசூலையும் அள்ளின. அதை விட பல மடங்கு எதிர் கருத்துகள் வந்தாலும் 'கபாலி' படத்தின் மொத்த வசூல் தொகை மிக மிக அதிகமாக இருக்கும் என்றே வியாபார வட்டாரங்களில் சொல்கிறார்கள்.


கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஒவ்வொரு மாநிலத்திற்குமான ரிசல்ட் வெவ்வேறு விதமாக உள்ளது. அங்கெல்லாம் என்ன வசூல் நிலவரம் என்பது இரண்டொரு நாளில்தான் தெரியும்.


'கபாலி' டீசருக்கு அபரிமிதான வரவேற்பு எப்போது கிடைத்ததோ...அன்றிலிருந்தே இந்தப் படம் பல எல்லைகளைக் கடந்தது. 'கபாலி' படத்திற்கு கிடைத்த வசூல், வரவேற்பு எல்லாவற்றிற்கும் காரணமாக அமைந்தது அந்த 'டீசர்' மட்டுமே.


ரஜினிகாந்த் என்ற ஒருவரைப் பற்றிய பேச்சுகள் கடந்த 20 வருடங்களாகவே மீடியாக்களில் அதிகமாகப் பேசப்பட்டு வருகின்றன. அரசியல் ஆனாலும் சரி, சினிமா ஆனாலும் சரி..ரஜினிகாந்த் கொண்டாடப்படும் ஒருவராகவே இருக்கிறார். அந்த விதத்தில்தான் தற்போது 'கபாலி' படம் பற்றி வெளியீட்டிற்குப் பின்னும் அலசப்பட்டு வருகிறது. எந்த வெற்றியும், தோல்வியும் அவரை பாதிக்கப் போவதில்லை என்பதே ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in