ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சந்தானம் படம் என்றால் காமெடிக்கு நிச்சயம் கேரண்டி. அந்த வகையில், டிவி.,யில் சந்தானம் மற்றும் குழுவினர் நடித்து மிக பிரபலமான லொள்ளு சபா நிகழ்ச்சியை இயக்கிய இயக்குனர் ராம் பாலா, சந்தானத்தை வைத்து ‛‛தில்லுக்கு துட்டு'' என்ற படத்தை எடுத்துள்ளார். விஷால், ஆர்யா என்று அத்தனை பேரையும் கலாய்த்தவர் முதன்முதலாக பேயை இந்த படத்தில் கலாய்க்கிறார். படம் நாளை(ஜூலை 7-ம் தேதி) வெளியாக உள்ளது. படம் பற்றி சந்தானம் நமிடம் பேசும்போது...
* படம் பற்றி ஒரு வரியில் சொல்லுங்க ?
இந்த படம் காமெடி கலந்த லவ் ஸ்டோரி. அதில் கொஞ்சம் ஹாரர் இருக்கும். பேய்களை பார்த்து மனிதர்கள் பயப்படுவதை விட, மனிதர்களை பார்த்து பேய் பயப்படுகிற மாதிரி கலாய்க்கிற மாதிரி இருக்கும். படம் முழுக்க கலகலனு இருக்கும்.
* தில்லுக்கு துட்டு படத்தை தைரியமா படம் பார்க்க வர்றவங்களுக்கு துட்டு எதும் தருவிங்களா?
நல்ல ஐடியா தான், தயாரிப்பாளர் கிட்ட கேட்டு அவர் ஓகே சொல்லிட்டா, நானே தியேட்டர் போய் படம் பார்க்க வருகிறவர்களுக்கு காசு தரலாம். இது கதைக்கு ரொம்ப பொருத்தமான தலைப்பாக இருந்ததால் இந்த தலைப்பை வைதிருக்கிறோம்.
* பேய் சீசன் என்பதால் நீங்களும் பேய் பக்கம் போய்டீங்களா?
நானும் இப்படி தான் தயாரிப்பாளர்கிட்ட கேட்டேன். எம்ஜிஆர்., காலத்திலிருந்து அக்ஷன் படங்கள் எடுத்து இருக்காங்க, இப்பவும் எடுக்குறாங்க, ஜெமினி கணேசன் காலத்தில் இருந்து காதல் படங்கள் எடுத்துட்டு இருந்தாங்க, இப்பவும் எடுத்துட்டு இருக்காங்க. அதேப்போல் தான் பேய் படங்களும், அப்ப அப்ப இந்த மாதிரி படங்கள் சீசன் வரும் போகும் என்றார்.
* எப்படி உங்களுக்கு மட்டும் இவ்ளோ அழகான கதாநாயகிகள் கிடைக்கிறாங்க?
ஐயோ நான் அந்த பக்கம் போறதில்லை. எல்லாம் இயக்குனர், தயாரிப்பாளர் சொல்றது தான், தேர்வு செய்வது தான். கதையின் தேவைக்கு ஏற்ப ஹீரோயின்கள் அவ்ளோதான், இந்த பொண்ணு மும்பை ஷெனாயா. நல்லா நடிக்கிறாங்க.
* விஜய், சூர்யா அளவுக்கு டான்ஸ் ஆடியிருக்கிங்க?
எல்லாரையும் நான் கலாய்பேன், என்னை நீங்க கலாய்க்கிறிங்கனு நினைக்கிறன். இந்த படத்தில் என்னால் எவ்வளவு சிறப்பாக செய்ய முடியுமோ, அதை கொடுத்திருக்கிறேன். 3 நாள் டான்ஸ் பயிற்சி எடுத்து நான்கு நாள் டான்ஸ் ஷூட்டிங் எடுத்தோம், சும்மா கலர் கலரா கண்ணாடி போட்டு நானும் ஹீரோ தாணு வந்தா எடுபடாது. மக்கள் இப்போது தெளிவாக இருக்காங்க உன்கிட்ட என்ன புதுசா செய்ய முடியுமோ அதை செய்து காட்டுன்னு சொல்றாங்க. அதுக்கான உழைப்பை நான் கொடுத்திருக்கேன்.
* தில்லுக்கு துட்டு படத்தில் வேற ஏதும் சிறப்பு இருக்கா?
படம், பேய் படம்னு இல்லாம ரொம்ப ஜாலியாக பார்ப்பீங்க. அதேசமயம் நெஞ்ச அடைகிற மாதிரி நான்கு ஐந்து இடங்கள் அப்படியே உங்களை உட்கார வைக்கற சீன் படத்தில் இருக்கு. ஏர்போர்ட் பக்கம் பிண்ணி மில்லில் ஒரு பேய் பங்களா செட் போட்டோம், அப்புறம் மூணாறு, ஏற்காடு, ஊட்டி போன்ற பல மலை பிரதேசங்களில் படப்பிடிப்பு எடுத்தோம்.
* ரொம்ப முக்கியமான கேள்வி காமெடி, சப்போர்ட் ரோல் மாதிரி நீங்க இனி நடிப்பிங்களா, இல்ல ஹீரோ ரோல் மட்டும் தானா?
இப்போதைக்கு நான் ஹீரோவாக நடிக்கிற படங்களே நான்கு ஐந்து படங்கள் இருக்கு. சர்வர் சுந்தரம், கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் பண்ண இயக்குநருக்கு ஒரு படம், என பிசியாக இருக்கேன். அதனால் மற்ற ரோல் நடிப்பது இபோதைக்கு இல்லை. இதனால் பல பெரிய படங்கள் என்னால் நடிக்க முடியாமல் இருக்கு.
* இப்ப ஆடியன்ஸ் எப்டி இருக்காங்க, என்ன மாதிரி படங்கள் விரும்புறாங்க?
மக்களுக்கு என்ன செய்தாலும் எதாச்சும் வித்யாசமாக இருக்கணும்னு நினைக்கிறாங்க. கதை, காமெடி எல்லாம் அவங்களுக்கு பிடிப்பது போன்று புதுசா யோசிக்கணும். பழைய குருமா திரும்ப பண்ணாதீங்க, புதுசா ஏதாச்சும் செய்ய பாருங்கனு சொல்றாங்க. நல்ல வித்தியாசமாக இருந்தால் ரசித்து ஏற்றுகொள்கிறார்கள்.
இவ்வாறு சந்தானம் கூறினார்.