‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
மங்காத்தாவில் இருந்து ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், வேதாளம் என தொடர்ந்து ஓரளவிற்கு ஹிட் படங்களை கொடுத்து வந்த அஜித், தனது 57வது படத்தை இந்த ஆண்டே முடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் அந்த படம் சில மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டது. இருப்பினும் ஜூலை 15ல் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வேதாளம் படத்தைப்போலவே இந்த படமும் ஆக்சன் கதையில் உருவாகயிருக்கிறது. முக்கியமாக தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிக்கும் பொருந்தக்கூடிய திரைக்கதையை உருவாக்கியிருக்கிறாராம் சிறுத்தை சிவா.
அதோடு, வேதாளம் படத்தில் கடந்த அக்டோபர் மாதத்தில் நடித்து முடித்த அஜித் கிட்டத்தட்ட பத்து மாதங்களாக கேமரா முன்பு வரவில்லை. இதற்கிடையே அறுவை சிச்சையும் நடந்ததால் உடற்பயிற்சிக்கு சில மாதங்களாக இடைவெளி கொடுத்திருந்தார். அதனால் அஜித்தின் உடல் எடையை அதிகரித்துள்ளதாம். இந்நிலையில், வெளிநாடு சென்றிருந்த அஜித், அங்கிருந்தபடி ஜிம் சென்று உடல் எடையை குறைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறாராம். அதனால், முன்பு இருந்ததை விட இப்போது ஸ்லிம்மாகி விட்டாராம் அஜித்.