தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கௌதம் மேனன் இயக்கும் படங்கள் திட்டமிட்டபடி முடிவடைவதும் இல்லை... குறிப்பிட்ட தேதிகளில் ரிலீஸ் ஆவதும் இல்லை. ஆனாலும் புதிபுதிதாக படங்களை ஆரம்பித்துக் கொண்டே இருக்கிறார். சிம்புவை வைத்து கௌதம் இயக்கி வரும் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் டீஸர், டிரைலர், பாடல்கள் வெளியிடப்பட்டுவிட்டன. சிம்புவின் சொதப்பல் காரணமாக தற்போது 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் ரிலீஸ் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது.
இன்னொரு பக்கம், தனுஷை வைத்து 'எனை நோக்கிப் பாயும் தோட்டா' படத்தையும் இயக்கி வருகிறார் கௌதம் மேனன். இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து அடுத்த வருடம் நாலு ஹீரோ, மூணு ஹீரோயின் நடிக்கும் நான்கு மொழிப் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார் கௌதம் மேனன்.
இப்படத்திற்காக மலையாளத்துக்கு ப்ருத்விராஜ், தெலுங்குக்கு சாய் சரண்தேஜ், கன்னடத்துக்கு புனித் ராஜ்குமார் ஆகியோரை ஹீரோக்களாக ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். தமிழுக்கு ஹீரோ யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. அனுஷ்கா, தமன்னா இருவரும் இப்படத்தின் ஹீரோயின்களாகவும் ஒப்பந்தமாகியிருக்கிறார்கள். மூன்றாவது நாயகியாக நடிக்கும் நடிகைக்கான தேடுதல் வேட்டை தற்போது நடந்து வருகிறது. சமந்தாவிடம் டேட் கேட்டிருக்கிறார் மேனன்.