மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
மெட்ராஸ் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான கலையரசன், அடுத்து 'டார்லிங்-2', 'ராஜா மந்திரி' ஆகிய படங்களில் நடித்தார். இவ்விரு படங்களுமே எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. குறிப்பாக கலையரசன் ஹீரோவாக பிரமோஷன் அடைந்த ராஜா மந்திரி படம் வசூல் ரீதியில் தோல்வியடைந்தது. எனவே அப்செட்டில் உள்ள கலையரசனுக்கு தற்போதைய ஆறுதல் ரஜினியின் 'கபாலி'படம்தான்.
கபாலி படத்தை தொடர்ந்து கலையரசன் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் 'சைனா'. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாசிடம் உதவியாளராக இருந்த ஹர்ஷவர்தனா இயக்கியுள்ளார். இவர் பழம்பெரும் ஒளிப்பதிவாளர் ஜெ.ஜி.விஜயம் என்பவரின் பேரன்.
பர்மா பஜார் பின்னணியில் எடுக்கப்படும் 'சைனா' படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக ரீத்து வர்மா நடித்துள்ளர். 'சூது கவ்வும்' படத்தில் இன்ஸ்பெக்டராக நடித்த யோக் ஜேபி, 'இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தில் நடித்த டேனியல் ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', 'மதுபானக்கடை' ஆகிய படங்களுக்கு இசை அமைத்த வேத் சங்கர் இசை அமைக்கிறார். சைனா படத்தின் வெற்றியில்தான் இருக்கிறது கலையரசனின் ஹீரோ கனவு. சைனா படம் ஓடவில்லை என்றால் கலையரசன் குணசித்திர வேடங்களில் மட்டும் நடிக்க முடிவு செய்துள்ளாராம்.