இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
காக்கா முட்டை வெற்றிக்கு பிறகு மணிகண்டன் இயக்கி உள்ள படம் குற்றமே தண்டனை. விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், பூஜா தேவரியா, ரகுமான், நாசர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார். மணிகண்டனே ஒளிப்பதிவும் செய்துள்ளார்.
இந்தப் படம் ஒரு க்ரைம் திரில்லர். ஒரு நெருக்கடியான அப்பார்ட்மெண்டில் தனியாக வசிக்கும் ஒரு பெண் கொல்லப்படுகிறாள். அவளை கொன்றது யார் என்பதை போலீஸ் விசாரிக்கிறது. அதை திகிலாவும், திகைக்க வைக்கும் திருப்பங்களுடனும் சொல்லும் படம். உண்மையான குற்றவாளி பிடிபட்டானா, தப்பித்தான என்பது கதை.
“ஒருவன் செய்யும் குற்றமே அவனை தூங்கவிடாமல் செய்து அனுஅனுவாக சித்ரவதை செய்யும் அதுவே அவனுக்கு பெரிய தண்டனை” என்ற கருத்தை சொல்லும் படம். படத்தின் டிரைலரை தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், செயலாளர் விஷால், துணை தலைவர் பொன்வண்ணன் ஆகியோர் வெளியிட்டனர்.