இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஆங்கிலேயர்களுக்கு ஷேக்ஸ்பியர் போன்று இஸ்லாமியர்களுக்கு கவிஞர் ஜலாலுதீன் முகம்மது ரூமி. தஜிஸ்கிஸ்தானில் உள்ள வாக்ஸ் கிராமத்தில் பிறந்தவர். பாரசீக மொழியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியவர். இஸ்லாமிய கவிஞராகவும், மத குருவாகவும், ஆசிரியராகவும் வாழ்ந்தவர். 1207ல் பிறந்து 1273ல் இறந்தார். அவரது கவிதை மற்றும் மத நூல்கள் உலகம் முழுவதும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அவரது வாழ்க்கை வரலாற்றை தற்போது ஹாலிவுட்டில் திரைப்படமாக தயாரிக்கிறார்கள். இதில் ரூபியாக 'டைட்டானிக்' படத்தில் அறிமுகமாகி சமீபத்தில் ஆஸ்கார் விருது வென்ற லியானார்டோ டிகாப்ரியோ நடிக்கிறார். இதற்காக அவர் நீண்ட தலைமுடி தாடி வளர்த்து வருகிறார்.
ரூபி வேடத்தில் டிகாப்ரியோ நடிக்க கூடாது. அந்த வேடம் அவருக்கு பொருந்தாது. கிழக்கு நாட்டைச் சேர்ந்த (ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக்) ஒருவர் தான் நடிக்க வேண்டும் என்கிற கருத்து மேலோங்கி இருக்கிறது. இதற்காக மிகப்பெரிய கையெழுத்து இயக்கம் ஒன்றையும் தொடங்கி இருக்கிறார்கள்.