தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கே.பாக்யராஜ் இயக்கதில் 'சித்து பிளஸ் 2' படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடித்தவர் சாந்தினி. எத்திராஜ் கல்லூரியில் விஷ்காம் முடித்து விட்டு அப்படியே சினிமாவுக்கு வந்தவர். அதன்பிறகு சில படங்களில் நடித்தும் சோபிக்காமல் இருந்தவர், இப்போது தனது திறமை, கடுமையான உழைப்பால் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறார். தற்போதுள்ள நடிகைகளில் அதிக படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் என்ற வகையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறார். ஒரே நேரத்தில் 10 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதன் விபரம் வருமாறு:
1. பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமலுடன் நடிக்கும் 'மன்னர் வகையறா'.
2. புதுமுகம் மணி செய்யோன் இயக்கத்தில் சிபிராஜ் நடிக்கும் 'கட்டப்பாவ காணோம்'.
3. பரத்துடன் ஜோடியாக நடிக்கும் 'என்னோடு விளையாடு'.
4. வெப்பம் படத்தை இயக்கிய அஞ்சனா இயக்கும் 'பல்லாண்டு வாழ்க'.
5. நடன இயக்குனர் கவுதம் இயக்கி வரும் 'கண்ணுல காச காட்டப்பா'.
6. அமீர் தயாரிக்கும் 'டாலர் தேசம்'.
7. அமீர் தயாரிக்கும் 'தாமி'.
8. புதுமுகத்தின் இயக்கத்தில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் படத்தில் நடித்த சந்தோஷ் ஜோடியாக 'நான் அவளை சந்தித்தபோது'.
9. நவின் கிருஷ்ணாவுடன் நடிக்கும் தெலுங்கு படம் 'அய்யா இஷ்டம் நூவு'.
10. இன்னும் பெயரிடப்படாத கன்னட படம்.
இன்றைய தேதியில் மிகவும் பிசியான நடிகை சாந்தினி. ஒரு சில படங்களில் இரு நாயகிகளில் ஒருவராக நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.