'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கு நடிகையான ஸ்ரீதிவ்யா தமிழில் அறிமுகமானது விதார்த்தின் காட்டு மல்லி படத்தில் தான் என்றாலும், அந்த படம் இப்போது வரை ரிலீசாகவில்லை. அதனால் சிவகார்த்திகேயனுடன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படமே ஸ்ரீதிவ்யாவுக்கு முதல் படமாகியது. அந்த படமும் சூப்பர் ஹிட்டானதால் பேசப்படும் நடிகையான அவர், அதன்பிறகு ஜீவா, வெள்ளக்காரதுரை படங்களில் நடித்தவர் மீண்டும் காக்கி சட்டை படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்தார்.
அதையடுத்து அவர் சிவகார்த்திகேயனுடன் அவர் இணையவில்லை. மாறாக, ரஜினிமுருகனில் அவருடன் ஜோடி சேர்ந்த கீர்த்தி சுரேஷே இப்போது ரெமோ படத்திலும் நாயகியாக நடித்துள்ளார். ஆனால் இந்த ரெமோ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நட்புக்காக நடித்துள்ளாராம் ஸ்ரீதிவ்யா. கதைப்படி, இந்த படத்தில் நடிகை வேடத்தில் அவர் நடித்திருக்கிறாராம். இருப்பினும் அவர் நடித்திருப்பதை இதுவரை வெளியில் சொல்லாமல் ரகசியமாக வைத்துள்ளார்கள்.