ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, நான், சலீம், இந்தியா பாகிஸ்தான் ஆகிய படங்களில் நடித்தபோது பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் தான் அந்த படங்கள் வெளியாகி வந்தன. அந்த வரிசையில், சசி இயக்கத்தில் அவர் நடித்த பிச்சைக்காரனுக்கும் பெரிதாக எதிர்பார்ப்பு இல்லை. ஆனால், அந்த படம் அவரது முந்தைய படங்களை விட மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதோடு, ஆந்திராவில் டப் செய்து வெளியிடப்பட்ட அப்படம் 15 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம். இதனால் அடுத்தபடியாக தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் விஜய் ஆண்டனியின் படங்களுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
அந்த வகையில், அவர் தயாரித்து நடித்துள்ள சைத்தான் படம் முதலில் சின்ன பட்ஜெட்டாகத்தான் உருவாகி வந்தது. ஆனால் இப்போது அந்த படத்திலும் பிரமாண்ட காட்சிகளை இணைத்து பெரிய படமாக்கிக்கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. அதேபோல் லைகா நிறுவனத்துக்காக அவர் நடிக்கும் எமன் படம் மெகா பட்ஜெட்டில் தயாராகிறது. மேலும். ஆரம்பத்தில் இருந்தே கதைகள் விசயத்தில் ரொம்ப கவனமாக இருந்து வரும் விஜய் ஆண்டனிக்காக அவரது மனைவி உள்பட அவரது குடும்பத்தார் பலரும் அமர்ந்து கதை கேட்கிறார்கள். அப்படி பல கதைகளை பல சுற்று கேட்டு அவர்களுக்கு திருப்தியாக இருந்தால் மட்டுமே பின்னர் விஜய் ஆண்டனிக்கு அனுப்புகிறார்கள்.
அப்படி கடைசியாக கதையே கேட்கும் விஜய் ஆண்டனி, தனக்கும் அந்த கதை ஓகே என்றால் அதை டிக் செய்து விடுகிறார். அதோடு, டைரக்டர்கள் கதை சொன்னாலும் டைட்டீல் விசயத்தில் அவரை யாரையும் தலையிட விடுவதில்லை. இதற்கு முன்பு அவர் நடித்த பிச்சைக்காரன் படத்திற்கு இந்த டைட்டீல்தான் வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாராம் விஜய் ஆண்டனி. அப்படி அவர் வைத்த டைட்டீல் பெரிய அளவில் ரீச்சானதால் இப்போது தனது ஒவ்வொரு படங்களுக்கும் தானே டைட்டீல் முடிவு செய்கிறாராம் விஜய் ஆண்டனி. ஒருவேளை சம்பந்தப்பட்ட டைரக்டர்கள் பல டைட்டீல்களை சொன்னால் அதிலிருந்து கதைக்கு பொருத்தமான டைட்டீலை தானே செலக்ட் பண்ணுகிறாராம் அவர்.