'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நீண்ட இடைவேளைக்கு பிறகு பாலிவுட்டில் கால் பதிக்கின்றார் முன்னாள் முன்னணி நடிகையான மனீஷா கொய்ராலா. சமீபத்தில் கன்னடம் மற்றும் தமிழில் உருவான " ஒரு மெல்லிய கோடு" படத்தில் நடித்திருந்தார் . இந்நிலையில் ஹிந்தி மற்றும் பெங்காலி ஆகிய இரு மொழிகளில் உருவாக இருக்கும் புதிய படத்தில் மனீஷா கொய்ராலா முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார் . இந்தப்படத்தில் மனீஷா, 20 வயது மகனுக்கு அம்மாவாக நடிக்கயிருக்கிறார். அறிமுக இயக்குநர் புரொமிதா சென்குப்தா இயக்குகிறார்.
இப்படத்தின் கதைப்படி மனீஷா , 20 வருடத்திற்கு முன் தெலைந்த தனது மகனை தேடி கண்டுபிடிக்கிறார் , அதன்பின் இருவருக்கும் இடையே உள்ள பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக இப்படம் உருவாக இருக்கிறது. இப்படத்தின் ஷூட்டிங் கோல்கட்டாவில் நவம்பர் மாதம் தொடங்கயிருக்கிறது.