தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் ஷாம், அர்ஜுன், மனீஷா கொய்ராலா நடிப்பில், இளையராஜா இசையில், ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஒரு மெல்லியகோடு. இப்படம் சில எதிர்பாராத காரணங்களால் வெளியாகவில்லை. ஆனால் ஏற்கனவே பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு காட்சி எல்லாம் போடப்பட்டது. இந்நிலையில் ஒரு மெல்லிய கோடு படம் நாளை வெளியாக இருக்கிறது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கிறார் ஷாம்.
இதுப்பற்றி ஷாம் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது... என் எல்லா தருணங்களிலும் உடன் இருக்கும் பத்திரிகை, தொலைக்காட்சி, இணையதள நண்பர்களுக்கு வணக்கம். நான் அர்ஜுன், மனீஷா கொய்ராலா நடித்த ஒரு மெல்லியகோடு படம் தவிர்க்க முடியாத காரணங்களால், குறிப்பிட்ட தேதியில் வெளியாகவில்லை. உங்களுக்கு படத்தைத் திரையிட்டும் காட்டினோம். தாமதத்தை முன்னிட்டு விமர்சனம் அப்போதைக்கு எழுத வேண்டாம் என்று கேட்டுக்கொண்டோம். இதுவரை எழுதாததற்கு நன்றி. இப்போது படம் வெளியாவதால் தங்கள் மேலான விமர்சனத்தை எழுதி என்னையும் படக்குழுவினரையும் ஊக்கப்படுத்தி ஆதரிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். என்மேல் என்றும் அன்புகாட்டி என் எல்லா தருணங்களிலும் துணைநிற்கும் உங்களுக்கு மீண்டும் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.