'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அலி அபாஸ் ஜாபர் இயக்கத்தில் சல்மான்கான் நடித்துள்ள படம் ‛சுல்தான்'. சல்மான், சுல்தான் எனும் கதாபாத்திரத்தில் மல்யுத்த வீரராக நடித்திருக்கிறார். அவருடன் அனுஷ்கா சர்மா, ரன்தீப் ஹூடா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள இப்படம் வருகிற ஜூலை 6ம் தேதி, ரம்ஜான் விருந்தாக திரைக்கு வர இருக்கிறது.
சல்மான் படம் இந்தியா மட்டுமின்றில் உலகின் பல நாடுகளிலும் ரிலீஸாகிறது. அதன் ஒருபகுதியாக சுல்தான் படம் ஜப்பானிலும் ரிலீஸ் ஆக இருக்கிறது. யாஸ் ராஜ் பிலிம்ஸ், ஜப்பானில் சுல்தான் படத்தை ரிலீஸ் செய்ய அனைத்து பணிகளையும் மேற்கொண்டுள்ளது. முதற்கட்டமாக ஜப்பானில் குறைவான தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளனர். படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து தியேட்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர். சுல்தான் படம், ஜப்பானில் ஜூலை 9ம் தேதி ரிலீஸாகிறது.