ஏப்., 30 முதல் ஒலிக்க தயாராகும் கமலின் மையம் விசில் ஆப் | தமிழ் சினிமாவை இந்திய சினிமாவே திரும்பி பார்க்கிறது : விஷால் | உன்னி முகுந்தனுக்கு டிப்ஸ் கொடுத்த அனுஷ்கா | கடவுள் என்னை மன்னிக்கமாட்டார் : பிருத்விராஜ் | எர்ணாகுளம் சாலைகளில் இளைஞர்களை பதறவைத்த மம்முட்டி | விஜய் ஆண்டனியை மாற்றிய அண்ணாதுரை | கைகொடுக்கும் ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் | தியா படத்துக்கு முன்னுரிமை ஏன்? | குழந்தைக்குரல் எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார் | பாடகியான சிவகுமாரின் மகள் |
பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சஞ்சய் தத். மும்பை குண்டுவெடிப்பு தொடர்பாக ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக சிறை சென்றதால் அவரின் சினிமா கேரியர் சரிந்தது. தற்போது சிறை வாசத்தை முடித்துவிட்டு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார் சஞ்சய்.
இதனிடையே சஞ்சய் தத்தின் நெருங்கிய நண்பரும், இயக்குநருமான ராஜ்குமார் ஹரானி, சஞ்சய் தத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் இயக்க உள்ளார். இதில் சஞ்சய் தத்தாக ரன்பீர் கபூர் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது துவங்கப்பட வேண்டியது, ஆனால் இன்னும் படப்பிடிப்பு ஆரம்பிக்கவில்லை, சில பிரச்னைகளால் இப்படத்தை இயக்குநர் கிடப்பில் போட்டு விட்டதாக கூறப்படுகிறது.
இயக்குநர் ராஜ்குமார் ஹிரானிக்கும், சஞ்சய் தத் வாழ்க்கை படத்தை தயாரிக்கவுள்ள தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும், இதன்காரணமாகத்தான் படப்பிடிப்பு துவங்கப்படாமல் இருப்பதாகவும், இவர்களுக்குள் பிரச்னை தீரும் வரை இப்படம் கிடப்பில் தான் இருக்கும் என்று பாலிவுட்டில் பேசப்படுகிறது.