Advertisement

சிறப்புச்செய்திகள்

நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நாளை 6 படங்கள் ரிலீஸ் : அப்பா... இன்னொரு விருது படம்

30 ஜூன், 2016 - 10:06 IST
எழுத்தின் அளவு:
Tomorrow-6-movies-to-be-release-:-Appa-is-another-award-film

எல்லாம் திட்டமிட்டபடி சரியாக நடந்திருந்தால் இந்த வாரம் அதாவது ஜூலை 1 ஆம் தேதி கபாலி படம் ரிலீஸ் ஆகியிருக்கும். முஸ்லீம்களின் விரத காலமான ரமலான் மாதத்தில் அதாவது ஜூலை 1 ஆம் தேதி கபாலி படத்தை வெளியிட்டால் மலேஷியா மற்றும் வளைகுடா நாடுகளில் மக்கள் தியேட்டருக்கு வர மாட்டார்கள் என்று சொல்லப்பட்டதால் கபாலி ரிலீஸை தள்ளி வைத்தனர்.


கபாலி ஜூலை 1 ரிலீஸ் இல்லை என்று தெரிந்ததும், இந்த வாரம் 6 திரைப்படங்கள் ரிலீசாகவிருக்கின்றன. சமுத்திரகனி இயக்கி, தயாரித்து ஹீரோவாகவும் நடித்துள்ள 'அப்பா', பர்மா படத்தை இயக்கிய தரணிதரன் இயக்கத்தில் சிபிராஜ், நடித்துள்ள 'ஜாக்சன் துரை', ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்கத்தில் அர்ஜுன், ஷாம், மனிஷா கொய்ராலா நடித்துள்ள 'ஒரு மெல்லிய கோடு', ராம்கோபால் வர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள 'வில்லாதி வில்லன் வீரப்பன்', 'தமிழன்' படத்தை இயக்கிய அப்துல் மஜீத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பைசா', விஜய் சண்முகவேல் அய்யனாரின் 'ஒன்பதிலிருந்து பத்து வரை' ஆகியவையே அந்த 6 படங்கள்!


சிபி ராஜ், நடித்துள்ள 'ஜாக்சன் துரை' ஹாரர் ரகம். சமுத்திரகனி இயக்கியுள்ள 'அப்பா' பிள்ளைகள் வளர்ப்பு குறித்து நல்ல ஒரு கருத்தை கூறும் படமாக அமைந்துள்ளது. ராம்கோபால் வர்மாவின் 'வில்லாதி வில்லன் வீரப்பன்' சந்தன கடத்தல் வீரப்பனை பற்றிய படம். 'ஒரு மெல்லிய கோடு' க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. அப்துல் மஜீத் இயக்கியுள்ள 'பைசா' குப்பை பொறுக்குகிறவர்கள் பற்றிய படம்.


'ஒன்பதிலிருந்து பத்து வரை' காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம். இப்படி வித்தியாசமான கதை அம்சங்களுடன் இந்த வாரம் வெள்ளிக் கிழமை அரை டஜன் படங்கள் ரிலீசாகின்றன. இந்த 6 படங்களில் என்னென்ன படங்கள் ரசிகர்களை கவர்ந்து வெற்றி படங்களாக அமையும் வரும் வெள்ளிக்கிழமையே தெரிந்துவிடும். என்றாலும் சமுத்திரக்கனியின் அப்பா படத்தை பத்திரிகையாளர்களுக்கு முன் கூட்டியே திரையிட்டனர். அப்பா படத்துக்கு மிகப்பெரிய பாராட்டு கிடைத்திருக்கிறது. காக்கா முட்டை போன்று இந்தப்படத்திற்கு விருது கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in