ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
வெள்ளைக்கார துரை, இது என்ன மாயம் போன்ற படங்கள் சறுக்கியதால், மிரண்டுபோன விக்ரம் பிரபு, இப்போது சுதாரித்துள்ளார். படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வதற்கு முன், பலமுறை, அதன் முழு கதையையும், காட்சிவாரியாக கேட்கிறார். அதில் திருப்தி ஏற்பட்டால் தான், ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுகிறாராம். அவரது எதிர்பார்ப்புக்கு ஏற்ப, வாகா, வீரசிவாஜி, முடிசூடா மன்னன் ஆகிய படங்கள் அமைந்துள்ளதாம். இதில், முதலில் வெளிவரப் போவது, வீரசிவாஜி. இதில், ஷாலினியின் தங்கை, ஷாமிலி, ஹீரோயினாக அறிமுகமாகிறார். இந்த படத்தின், 'டீசர்' சமீபத்தில் வெளியிடப்பட்டது. காட்சிகள் நன்றாக வந்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. விக்ரம் பிரபுவின் ஏமாற்றத்துக்கு, வீரசிவாஜி முற்றுப்புள்ளி வைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.