தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
முழுமையான ஹாலிவுட் நடிகையாகி விட்டார் பிரியங்கா சோப்ரா. 'குவாண்டிகோ' டிவி தொடரை அடுத்து, பேவாட்ச் ரீபூட் என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். இந்தாண்டின் பெரும்பாலான நாட்களை, படப்பிடிப்புக்காக அமெரிக்காவிலேயே செலவிட்டுள்ளார். ஆனாலும், ஹாலிவுட்டில் உள்ள சிலர், இந்திய திரைப்படங்கள் குறித்தும், இந்திய நடிகையர் குறித்தும், கிண்டல் கலந்த விமர்சனங்களை வைப்பது, அவரை கடுப்பேற்றியுள்ளது. 'இந்திய நடிகர்கள் என்றால், அவர்களை ஜோக்கர் போல் கருதும் மனப்பான்மை ஹாலிவுட்டில் நிலவுகிறது. இந்திய திரைப்படங்களில் வரும் பாடல் காட்சிகளில் நடிப்பதற்கும், நடனமாடுவதற்கும் எவ்வளவு சிரமப்பட வேண்டும் தெரியுமா; நடித்துப் பார்த்தால் தான் தெரியும்' என, அமெரிக்க மீடியாக்களை அதிர வைத்துள்ளார் பிரியங்கா.